நடிகை சமந்தாவிற்கு என்ன ஆச்சு..!!  நடக்க முடியாத நிலையில் இருக்கிறாராம்...

 
1

முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. சமீப காலமாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். விஜய், சூர்யா உள்ளிட்ட கோலிவுட் நடிகர்களுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதேபோல தெலுங்கிலும் பல சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் ரசிகர்களை குலுங்க வைத்தது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, சகுந்தலம் மற்றும் யாசோதா ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். நடிகை சமந்தா, இப்போது விஜய தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தியிலும் நடிக்க இருக்கிறார்.

Samantha

இந்த நிலையில் அவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சரும பிரச்சினை ஏற்பட்டது. சமீபத்தில் இவர் மயோடிசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

இதனிடையே கடந்த இரு நாள்களுக்கு முன்பு மீண்டும் உடல் நலக் குறைவால் சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அவர் வீட்டிலேயே தங்கி சிகிச்சைப் பெற்று வருவதாக சமந்தாவின் உதவியாளர் தெரிவித்திருந்தார். 

Samantha

இந்நிலையில், தொடர் சிகிச்சையின் காரணமாக தற்போது சமந்தா எழுந்து நடக்க முடியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரின் அறையில் உள்ள கட்டிலில் படுத்தபடியே இருப்பதாகவும், எழுந்து சிறிது தூரம் கூட நடக்க முடியவில்லை எனவும் தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் பரவுகின்றன. சமந்தா விரைவில் குணமடைந்து பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது.

From Around the web