என்ன... சீரியலில் நடிக்கிறாரா இயக்குனர் பாக்யராஜ்..?

 
1

சின்னத்திரையில் ரசிகர்களை கவர்ந்த சீரியல்களில் ஒன்று ‘வித்யா நம்பர் 1’.ஜீ தமிழ் ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  படிக்காத கதாநாயகியான வித்யாவை சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணம் செய்துக்கொள்கிறார்‌ சஞ்சய். ஆரம்பத்தில் வித்யாவை பிடிக்கவில்லையென்றாலும் தற்போது இவர்களுள் காதல் உருவாகி புரிந்துக் கொள்கிறார் சஞ்சய். 

இந்நிலையில் வித்யாவுக்கு புதிய புதிய ரூபத்தில் பிரச்சினை வருகிறது. அதன்படி தற்போது புதிய பிரச்சினையாக வில்லனான ரஞ்சித், வித்யாவுடன் தனக்கு திருமணமாகிவிட்டதாக கூறி வழக்கு தொடர்கிறான். 

இதனால் அதிர்ச்சி அடையும் வித்யா, எப்படி சமாளிப்பது என்று தவித்து வருகிறார். மாமியார் வேதவல்லியும் இந்த பிரச்சினையை நீயே சமாளித்துக் கொள் என்று சொல்கிறார். இதைத்தொடர்ந்து தன்னுடைய வழக்கை தானே வாதாட முடிவு செய்கிறார் வித்யா. இப்படி அடுத்தடுத்து பரபரப்பாக சீரியல் சென்றுக் கொண்டிருக்கையில் பிரபல இயக்குனரான பாக்யராஜ் இந்த சீரியலில் இணைந்துள்ளார். நீதிபதியாக நடித்துள்ள இந்த சீரியலின் எபிசோடு விரைவில் ஒளிப்பரப்பாக உள்ளது. 

1

From Around the web