நடிகர் விக்ரமுக்கு என்ன தான் ஆச்சு..!! மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை..!! 

 
1

நடிகர் சீயான் விக்ரமுக்கு திடீரென நேற்று மாரடைப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என விக்ரம் தரப்பில் இருந்து இதற்கான விளக்கம் அளிக்கப்பட்டது . விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது உண்மை தான். லேசான நெஞ்சு அசௌகரியம் காரணமாக மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார் தற்போது நலமாக உள்ளார்.ஒரு நாளில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்.தேவையற்ற வதந்திகளை தவிர்த்து விடுங்கள் என்று விக்ரமின் மகனும் சமூகவலைத்தளங்களில் வேண்டுகோள் விடுத்திருந்தார் .

நடிகர் விக்ரமின் மேனேஜர் கூறியதாவது, இதுபோன்ற போலி செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் எங்களது தனி உரிமைக்கு மதிப்பளிக்கும் படியும் கேட்டுக்கொள்கிறோம். நம்முடைய அன்புள்ள சீயான் தற்போது நலமாக இருக்கிறார். அவர் இன்னும் ஒரு நாளில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் நிலையில் உள்ளார். போலியான செய்திகளுக்கு எதிராக இந்த அறிக்கை தெளிவு மற்றும் உண்மையை உங்களுக்கு எடுத்து கூறி இருக்கும் என்று நம்புகிறோம்" என்று விக்ரமின் நீண்ட நாள் மேனேஜராக இருந்து வரும் சூரிய நாராயணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் விக்ரமின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

அதில் நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அட்மிட் ஆனதாகவும், அதற்காக நிபுணர் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.“அவருக்கு மாராடைப்பு ஏற்படவில்லை, உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” எனவும் மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

1

From Around the web