கவுண்டமணி வந்தவுடன் எழுந்து நின்று வரவேற்பு அளித்த திரையுலகம்..!!

 
1

 மறைந்த நடிகர் ஐசரி வேலன் அவர்களின் 35 வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலையை நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார். இந்த விழாவிற்கு தென்னிந்திய திரையுலகைச் சார்ந்த நடிகர்கள், நடிகைகள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

இந்தநிலையில் அரங்கத்திற்கு வந்த நடிகர் கவுண்டமணியைப் பார்த்து அங்கிருந்த அத்தனை நடிகர்களும் உற்சாகம் அடைந்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடியில் ஜாம்பவனாகவும், சக்கரவர்த்தியாகவும் திகழ்ந்தவர் நடிகர் கவுண்டமணி. .

நீண்ட நாட்களாக அவரை திரையில் பார்க்க முடியவில்லை என்றாலும் அவர் எங்கெல்லாம் செல்கிறாரோ அந்த இடம் மொத்தத்தையும் எளிதில் கவர்ந்திழுக்க கூடியவர். நடிகர் கமல், ராதிகா, பாக்கியராஜ், பிரஷாந்த், லதா என எவ்வளவு பேர் பெற்ற நடிகர்கள் வந்தாலும் அங்கு கவுண்டமணியின் எண்ட்ரீ தான் அனைவரையும் உற்சாகப்படுத்தியது.

From Around the web