ஆடு பகையா இருக்கும் போது குட்டி மட்டும் எப்படி உறவா இருக்க முடியும்  - அதிரடியா வெளியான பட்டத்து அரசன் டிரெய்லர்..!!

 
1

இந்த படத்தை களவாணி, களவாணி 2, டோரா, வாகை சூடவா, நய்யாண்டி, சண்டி வீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சற்குணம் இயக்கியுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் அதர்வாவுடன் இணைந்து ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதர்வாவுக்கு ஜோடியா ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘வாகை சூடவா’ படத்தில் தனக்கான தனி முத்திரையை பதித்து சிறந்த தமிழ் படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குநர் சற்குணம் ,ஏற்கனவே அதர்வா நடிப்பில் ‘சண்டிவீரன்’ படத்தை இயக்குயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. கபடி மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் அதர்வா அடித்து நொறுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 

From Around the web