மாயோன் ஒடிடி ரிலீஸ் உரிமையை கைப்பற்ற போவது யார்..?

சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாயோன்'. அறிமுக இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலைச் சுற்றி நடக்கும் மர்மத்தை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக தன்யாவும்,வில்லனான ஹரிஷ் பெராடி நடித்துள்ளனர். இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளது. இப்படம் கோயில், அதுசார்ந்த மர்மங்களுக்களுடன் வித்தியாசமான கதைக்களத்தடன் உருவாகியுள்ளது.
இப்படம் கனடாவில் இந்த ஆண்டு நடைபெற்ற 47வது டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த புராணங்களுக்கான திரைப்பட விருதை வென்றிருக்கிறது.
தற்போது வரை மாயோன் படத்தின் ஒடிடி உரிமையை எந்த ஒரு நிறுவனமும் கைப்பற்றாத நிலையில் மாயோன் ஒடிடி உரிமையை வாங்கும் நிறுவனத்துக்கு நிச்சயம் பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மாயோன் ஒடிடி-ரிலீஸ் உரிமையை கைப்பற்ற போவது யார்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.