நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுத்த பிரபலம் இவரா?

 
1

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை இன்று திருமணம் செய்து கொண்டார். இதற்கான விழா ஈ.சி.ஆர் சாலையில் உள்ள ஈ.சி.ஆர் சாலையிலுள்ள ஷெரட்டன் கிராண்ட் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் பிரபலங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருமண விழாவுக்கு அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த விழாவில்  முன்னணி திரைபிரலங்கள் பங்கேற்றுள்ளனர்.பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்களுடன் பிரபலங்கள் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி மற்றும் அனைத்து உள்ளிட்ட ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் வருகை தந்தனர்.

1

இந்நிலையில் மாமல்லபுரத்தில் இன்று காலை 10.25 மணிக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் திருமணம் நடைபெற்றது. 

இந்த திருமண விழாவின் ஒளிபரப்பு உரிமை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த விடுதிக்கு வெளியில் உள்ள சாலையில் கூட பொதுமக்களையும் செய்தியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் மற்றொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கல்யாணத்தில் தாலியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எடுத்துக் கொடுக்க, விக்னேஷ் சிவன் கண்களில் நீர் ததும்ப நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார்.


 

From Around the web