கேஜிஎப் 3 படத்தின் வில்லன் இவரா..? 

 
1

உலகம் முழுவதும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது ’கேஜிஎப் 2’ திரைப்படம்.இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.

1

தற்போது இந்த படத்தில் வில்லனாக ரானா டகுபதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் வில்லனாக நடித்த ரானா டகுபதி இந்த படத்தில் இணைந்தால் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.இருந்தாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web