இந்தவாரம் பிக்பாஸை தொகுத்து வழங்கப்போவது யார்?
Nov 25, 2022, 18:59 IST
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பிக்பாஸூக்கு ஒரு சோகமான செய்தி வந்து சேர்ந்துள்ளது. இதுவரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த கமல்ஹாசன் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். சளி உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக இன்னும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் கமல்ஹாசன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப்போகிறார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்தமுறை இதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் உடல்நலக்குறைவால் பங்கேற்க முடியாமல் போனபோது நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அவரே இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கலாம் என கூறப்படுகிறது.