பிரபல நடிகை தமன்னாவிற்கு விரைவில் திருமணமா ? இன்ஸ்டாவில் பிஸ்னஸ் மேன் கணவர் என பதிவிட்ட நடிகை ..!!  

 
1

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை தம்மனா. 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடித்த ‘கேடி’ படத்தின் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார் தமன்னா. ஆனால், அதற்கு முன்பாகவே இவர் 2005 ஆம் ஆண்டு இந்தி படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார்.

இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என பிற மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார்.அதோடு இவர் சில வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இப்படி இவர் சினிமா உலகில் நுழைந்து 17 வருடங்களுக்கு மேல் ஆகிறது.

இந்நிலையில் தற்போது தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தமன்னா தன் வீட்டில் பார்க்கும் பையனை தான் திருமணம் செய்வேன் என முன்பிருந்தே கூறி வருகிறார். தற்போது மும்பையை சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரை தான் தமன்னா திருமணம் செய்ய இருக்கிறார்.

இதற்குமுன் தமன்னா திருமணம் பற்றிய செய்தி பரவினால் அது வதந்தி என உடனே விளக்கம் அளித்துவிடுவார். ஆனால் தற்போது அவர் திருமண செய்தியை மறுக்கவில்லை.அதனால் தமன்னாவுக்கு மும்பை தொழிலதிபருடன் திருமணம் நடப்பது உறுதியாகி இருப்பதாக தெரிகிறது. மேலும் தமன்னாவே திருமணத்தை விரைவில் அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமன்னா திருமணம் செய்து கொள்ளும் நபர் குறித்த தகவல் வெளியிட்டுள்ளார்.

தமன்னா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஆண் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘என்னுடைய பிஸ்னஸ் மேன் கணவரை அறிமுகம் செய்து வைக்கிறேன்’ என்று கேலியாக பதிவிட்டு தன்னுடைய திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

From Around the web