யாராவது தன்னைப்பற்றி மேடையில் அசிங்கமாக பேசுங்கள் என்று சொல்வார்களா?  நடிகை தர்ஷா குப்தா ஆவேசம்..!!

 
1

ஆர்.யுவன் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள ‘ஓ மை கோஸ்ட்’ படத்தில் நடிகை சன்னி லியோன் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி மற்றும் கே.சசி குமார் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் சன்னிலியோன் உட்பட படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கலந்து கொண்டு பேசினர்.

OMG

இது குறித்து மேடையில் பேசிய நடிகர் சதீஷ், “வெளிநாட்டில் இருந்து வந்துள்ள நடிகை சன்னிலியோன் நமது கலாச்சாரப்படி சேலை அணிந்து வந்திருக்கிறார். ஆனால் நடிகை தர்ஷா குப்தா கோயம்புத்தூரை சேர்ந்தவராக இருந்தாலும் எப்படி உடை அணிந்து வந்துள்ளார்” என்று பேசினார். இதைத்தொடர்ந்து சதீஷின் பேச்சுக்கு பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்த பதிவுகளின் எப்படி உடை அணிய வேண்டும் என்பது அவரவருடைய தனிப்பட்ட விருப்பம் என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு விளக்கம் அளித்த சதீஷ், தர்ஷாதான் சன்னிலியோன் சேலையிலும், தான் கவர்ச்சி உடையிலும் வந்தது அதிர்ச்சியாக உள்ளது என்றும், இதனை மேடையில் நீங்கள் பேசுங்கள் என்று சொன்னதாலேயே நான் அப்படி பேசினேன் என்றும் கூறினார். 

இதற்கு தர்ஷா குப்தா கண்டனம் தெரிவித்து சதீஷை கடுமையாக சாடி உள்ளார். வலைத்தளத்தில் தர்ஷா வெளியிட்டுள்ள பதிவில், “இந்த பிரச்சினையை சதீஷ், என்பக்கம் திருப்பி விடுவது முறையல்ல. நான் உங்களிடம் அப்படி பேசுங்கள் என்று சொன்னேனா? ரொம்ப விசித்திரமாக உள்ளது. யாராவது தன்னைப்பற்றி மேடையில் அசிங்கமாக பேசுங்கள் என்று சொல்வார்களா? மேடையில் சன்னி லியோன் உடையையும், நான் அணிந்து வந்த உடையையும் ஒப்பிட்டு சதீஷ் பேசியது அப்போதே என்னை காயப்படுத்தியது. அப்போது அதை பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது இப்படி சொல்வது சரியல்ல” என்றார். இந்த சர்ச்சை வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது.


 

From Around the web