‘புஷ்பா 2’ படத்தில் மலர் டீச்சர் இருக்காங்களா..?

 
1

செம்மரக் கடத்தலை மையமாக வைத்து தெலுங்கில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘புஷ்பா’. அல்லு அர்ஜூன், வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் இந்தியா முழுவதும் நல்ல விமர்சனங்களை பெற்றது. பான் இந்தியா திரைப்டமாக உருவான இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது. 

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்க இயக்குனர் சுகுமார் முயற்சித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை சாய் பல்லவி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியது.அந்த படத்தில் பழங்குடியின பெண் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவல்கள் அனைத்துமே வதந்தி என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார். இதனால் சாய் பல்லவி ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.  

From Around the web