தளபதி விஜய்க்கு வில்லி சமந்தாவா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!  

 
1

நடிகர் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார் விஜய்.  இப்படம் கேங்க்ஸ்டர் படமாக உருவாக உள்ளது. இதற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி 67 படத்தில் நடிகை சமந்தாவும் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரது கேரக்டர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சமந்தாவை பொறுத்தவரை முன்னதாக விஜயுடன், 'தெறி', 'கத்தி', 'மெர்சல்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மீண்டும் விஜயுடன் இணையும் அவர் இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக எதிர்மறை கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.அதாவது, நடிகை சமந்தா இப்படத்தில் வில்லி கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விக்ரம் படத்தில் இடம்பெற்ற ரோலெக்ஸ் சூர்யாவின் கேரக்டரைப் போல் இதுவும் அத்தனை கச்சிதமாக பொருந்தும் கேரக்டராக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் சேதுபதிதான் பொதுவாக வில்லன் ரோல் செய்துவரும் சூழலில் தற்போது லோகேஷ் படத்தில் சமந்தா வில்லி என வெளியாகியிருக்கும் தகவல் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது. 

From Around the web