திருமணமான ஒரே வாரத்தில் ஹன்சிகா வீட்டிற்கு வந்த விவாகரத்து செய்தி..!! அதிர்ச்சியில் குடும்பத்தினர்
‘ஷக்கலக்கா பூம் பூம்’ என்ற தொடரின் மூலம் தொலைக்காட்சிப் பயணத்தைத் தொடங்கியவர் ஹன்சிகா மோட்வானி. அதே நேரத்தில் ‘தேஸ் மெய்ன் நிக்லா ஹோகா சானத்’ என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா நடித்தார். இதற்காக ஸ்டார் பரிவார் விருதுகளில் விருப்பமான குழந்தை விருதை அவர் பெற்றார்.
இதையடுத்து, 2007-ம் ஆண்டு பூரி ஜெகனாத் இயக்கத்தில் வெளியான ‘தேசமுதுரு’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘ஆப் கா சரூர்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் 2008-ல் வெளியான ‘பிந்தாஸ்’ என்ற கன்னடப் படத்தில் புனித் ராஜ்குமாருடன் நடித்தார். பின்னர், 2011-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘வேலாயுதம்’ படத்தில் அறிமுகமான இவர், ‘மாப்பிள்ளை’, ‘எங்கேயும் காதல்’, ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சேட்டை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் ஹன்சிகா நடித்த 50வது திரைப்படமாக ‘மஹா’ வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில், திடீரென தன்னுடைய திருமணம் குறித்த தகவலை வெளியிட்டு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அந்த வகையில் தன்னுடைய பிசினஸ் பார்ட்னரும், நீண்ட நாள் நண்பரும், தன்னுடைய தோழியின் முன்னாள் கணவருமான சோஹைல் கதுரியா என்பவரை, திருமணம் செய்து கொள்ள உள்ளதாக ஹன்சிகா புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 4-ம் தேதி இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாழ்ந்த, முன்டோட அரண்மனையில் மிக பிரமாண்டமாக நடந்தது. இவர்களுடைய திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், திரை பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும், இவர்களுடைய திருமணம் ஒளிபரப்பு உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக கூறப்படும் நிலையில், திருமணத்திற்கு வருபவர்களுக்கு சில விதிமுறைகளும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவருடைய திருமண நடந்த போது தன்னுடைய அம்மா மற்றும் சகோதரருடன் மட்டுமே புகைப்படங்களை எடுத்துக் கொண்ட ஹன்சிகா, அவருடைய அண்ணனின் மனைவி முஸ்கான் நான்சியுடன் எடுத்து கொண்ட ஒரு புகைப்படங்கள் கூட வெளியாகவில்லை. ஏன் அவர் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என சமூக வலைதளத்திலும் பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் ஹன்சிகாவுக்கு திருமணம் முடிந்து ஒரு வாரமே ஆகும் நிலையில், பிரசாந்த் மோத்வானி தன்னுடைய மனைவி முஸ்கான் நான்சியை விவாகரத்து செய்ய உள்ளதாக கூறி நீதிமன்றத்தை அணுகியுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பிரசாந்த் மோத்வானிக்கும், முஸ்கான் நான்சிக்கும், கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி திருமணம் நடந்தது. இவர்களுடைய திருமணத்தில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் கருத்து வேறுபாடு உள்ள நிலையில், பிரிந்து வாழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஹன்சிகாவின் திருமணத்தையும் முஸ்கான் நான்சி புறக்கணித்திருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது இருவரின் விவாகரத்து குறித்து வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.