சூர்யாவுக்கு 14 லட்சம் மதிப்புள்ள கிப்ட் கொடுத்த உலக நாயகன்..!! 

 
1

விஜய்யின் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது கமலின் விக்ரமையும் மற்றொரு பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி போன்ற நட்சத்திரப்பட்டாளங்கள் நடித்த நிலையில் கடைசி 3 நிமிடத்தில் வந்த சூர்யாவின் காட்சிகளானது திரையரங்கை அதிரவைத்தது.

ஜுன் 3-ம் தேதி வெளியான விக்ரம் படம் முதல் நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் 109 கோடி வசூலை தாண்டி உள்ளது. வார நாட்களில் குறைவாகவும், வார இறுதி நாட்களில் பல மடங்கு அதிகமாகவும் விக்ரம் வசூல் இருந்து வருகிறது. இதனால் இனி வரும் நாட்களில் வசூல் இன்னும் அதிகரித்து, விரைவில் 500 கோடி கிளப்பில் விக்ரம் படம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kamal

இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜை பாராட்டி கமல்ஹாசன் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதிருந்தார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த லோகேஷ், லைப் டைம் செட்டிலுமெண்ட் லெட்டர் என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு இதை படித்த நான் எவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. நன்றி ஆண்டவரே என பதிவிட்டிருந்தார்.

இதை தொடர்ந்து, விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக உலகநாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜிக்கு விலை உயர்ந்த லெக்ஸஸ் காரை பரிசாக வழங்கியுள்ளார். மேலும், அவருடன் பணி புரிந்த 13 உதவி இயக்குநர்களுக்கு டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கை அன்பளிப்பாக அளித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் சூர்யாவுக்கு கமல்ஹாசன் 14 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கேரக்டரில் மிரட்டியிருப்பார். இந்த படத்திற்காக சூர்யா சம்பளம் ஏதும் வாங்காமல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இருந்தார்.

இதுதொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூர்யா, இந்த தருணம் வாழ்க்கையை இன்னும் அழகாக்குகிறது. நன்றி அண்ணா (கமல்) என்று குறிப்பிட்டுள்ளார்.


 

From Around the web