இப்படி ஒரு நிலைமை உங்க பெத்தவங்களுக்கு வந்தா நீங்க இத செய்வீர்களா..? வெளியான 'தலைக்கூத்தல்' படத்தின் டீசர்

 
1

கருணைக்கொலையை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள திரைப்படம் 'தலைக்கூத்தல்' இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார். மார்ட்டின் டான்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். டேனி சார்லஸ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த நிலையில், இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'தலைக் கூத்தல்' திரைப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

From Around the web