தனது நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார் யாரடி நீ மோகினி சீரியல் நடிகை..!! ரசிகர்கள் வாழ்த்து..!! 

 
1

 ‘கிடா பூசாரி மகுடி’ படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கேரளாவைச் சேர்ந்த நடிகை நட்சத்திரா. இதனைத் தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்தாலும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு சினிமா கை கொடுக்கவில்லை என்பதால், சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார்.

அதையடுத்து ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் வெண்ணிலாவாக நடித்து பிரபலமானார். இந்த தொடர் முடிவைடைந்ததும், தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘வள்ளி திருமணம்’ சீரியலில் வள்ளியாக நடித்து வருகிறார்.

nakshatra

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு ‘யாரடி நீ மோகினி’ தொடரில் நட்சத்திராவுடன் நடித்த நடிகை ஸ்ரீநிதி, ‘நட்சத்திரா திருமணம் தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அவரை கடத்தி வைத்திருப்பதாகவும், கட்டாய திருமணம் செய்யவுள்ளதாகவும், அவரின் உயிருக்கே ஆபத்து என்றெல்லாம் பேசியிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தது.

இதனையடுத்த் ஸ்ரீநிதியின் பேச்சை மறுத்து நட்சத்திராவும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இவர் காதலிக்கும் விஷ்வா என்பவர் ஜீ தமிழ் சேனலில் சில சீரியல்களின் தயாரிப்பு நிர்வாகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் சினிமா தயாரிப்பாளரும் நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ குடும்பத்துடனும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் விஷ்வா.

இந்நிலையில், இவருக்கும் விஷ்வா என்பவருக்கும் திடீர் என திருமணம் நடந்துள்ளது. தன்னுடைய கணவருடன் மாலையும், கழுத்துமாக நட்சத்திரா இருக்கும் புகைப்படங்கள் வெளியாக அவை வைரலாகி வருகிறது. மேலும் பலரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

nakshatra

நட்சத்திராவைத் தூக்கி வளர்த்த தாத்தா உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். பள்ளிப் படிப்பு வரை நட்சத்திரா அந்தத் தாத்தாவின் வீட்டிலிருந்தே வளர்ந்தவர். அந்தத் தாத்தாவின் ஒரே ஆசை நட்சத்திராவை மாலையும் கழுத்துமாகப் பார்த்து விட வேண்டும் என்பதுதான். அதனால தாத்தாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக குடும்பக் கோயிலில் வைத்து வீட்டுப் பெரியவர்கள் முன்னிலையில் நட்சத்திரா - விஷ்வா திருமணம் நடந்து முடிந்தாகச் சொல்கிறார்கள், நட்சத்திராவின் நெருங்கிய நட்பு வட்டத்தினர். சின்னத்திரை நண்பர்களுக்காக‌ விரைவில் சென்னையில் வரவேற்பு நடக்க இருக்கிறதாம்.

From Around the web