இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை... வசமாக சிக்கிய காதலன்.. 

 
1

2015-ல் சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாரத் கா வீர் புத்ரா - மகாராணா பிரதாப்’ என்ற தொடரில் சந்த் கவார் என்ற பாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை துனிஷா சர்மா. அதனைத் தொடர்ந்து சக்கரவர்த்தி அசோகா சாம்ராட்டில் ராஜகுமாரி அஹங்காராவாக நடித்தார்.

2016-ல் அபிஷேக் கபூர் இயக்கத்தில் வெளியான ‘ஃபிதூர்’ படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். இதில் இளம் வயது கத்ரீனா கைஃப்பாக நடித்தார். பின்னர் அதே ஆண்டில் வெளியான ‘பார் பார் தேகோ’ படத்திலும் இளம் வயது கத்ரீனா கைஃப்பாக நடித்தார். அதனைத் தொடர்ந்து ‘கஹானி 2: துர்கா ராணி சிங்’, ‘தபாங் 3’ படத்திலும் நடித்தார்.

Tunisha sharma

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் வசாய் என்ற இடத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தது அப்போது, நடிகை துனிஷா சர்மா, தேனீர் இடைவேளையில் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வராததால், படக்குழுவினர் கழிவறையின் கதவை தட்டியுள்ளனர். அப்போதும் எந்தவிதமான சத்தமும் வராததால், சந்தேகம் அடைந்த படக்குழுவினர் கழிவறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, நடிகை துனிஷா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

இதையடுத்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது பிரேத பரிசோதனை இன்று அதிகாலை மும்பை ஜேஜே மருத்துவமனையில் நடத்தப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் நடிகை தற்கொலை செய்து கொண்ட இடத்தில் இருந்து எந்த பொருளும் கிடைக்காததால், தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.

Tunisha sharma

நடிகை துனிஷா சர்மாவின் தாய், சக நடிகரான ஷீசன் முகமது கான் தான் தனது மகளின் தற்கொலைக்கு காரணம் என்று புகார் அளித்துள்ளார். ஷீசன் முகமது கானுடன் தனது மகள் உறவில் இருந்ததாகவும், இதனால், அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறிய புகாரை அடுத்து, மும்பை போலீசார் நடிகர் ஷீசனை, ஐபிசி 306 பிரிவின் கீழ் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கைது செய்தனர். ஷீசன் இன்று 
திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

மேலும், நடிகை துனியா சர்மாவுக்கும், காதலன் ஷீசனுக்கும் இடையே சில நாட்களாக சண்டை இருந்ததாகவும் கூறப்படுகிறது. காதலருடன் ஏற்பட்ட சண்டையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

From Around the web