சூர்யா படத்துக்கு மூன்றாவது முறையாக ஏ சான்றிதழ்..!

 
ஜெய் பீம்

நடிகர் சூர்யா நடித்து வெளியாகவுள்ள புதிய படத்துக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் படம் மூலம் அறிமுகமான சூர்யாவுக்கு பாலா இயக்கத்தில் வெளியான ‘நந்தா’ திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்துக்கு அப்போது தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியது.

அதை தொடர்ந்து அவர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘ரத்த சரித்திரம்’. அதிகளவிலான வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி இந்த படத்துக்கும் அப்போதைய தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியது.

இந்த வரிசையில் மூன்றாவது முறையாக சூர்யா நடித்துள்ள படம் ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ஓடிடி வெளியீட்டுக்காக தயாராகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞராஜ கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.  தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகிற நவம்பர் மாதம் 2-ந் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் சென்சார் அப்டேட் மற்றும் ரன்னிங் டைம் வெளியாகி உள்ளது. அதன்படி ‘ஜெய் பீம்’ படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படம் 164 நிமிடம் ஓடக்கூடியதாக தயாராகியுள்ளது. 
 

From Around the web