டிக்டாக் இலக்கியா படத்திற்கு ’ஏ’ சான்றிதழ்..!
 

 
நீ சுடத்தான் வந்தியா

டிக்டாக் மூலம் கவர்ச்சி காட்டி பிரபலமான இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சமூகவலைதளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் பதிவிட்டு வந்தவர் இலக்கியா. டிக்டாக் வந்த பிறகு தொடர்ந்து கவர்ச்சியாக டான்ஸ் ஆடி வீடியோக்களை பதிவிட தொடங்கினார். இதன்மூலம் அவர் மேலும் பிரபலமானார்.

சினிமா வாய்ப்புகளும் அவருக்கு குவிந்தன. அவருடைய நடிப்பில் புதியதாக உருவாகியுள்ள படம் ‘நீ சுடத்தான் வந்தியா’. இந்த படத்துக்கு தணிக்கை வழங்க எட்டு அதிகாரிகள் படம் பார்த்தனர். இறுதியில் படத்துக்கு அவர்கள் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இந்த படத்தை அருண்குமார் என்பவர் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் கூத்துப்பட்டறையில் பயிற்சி எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் டிரெய்லர் சமூகவலைதளங்களில் வெளியாகிவிட்டது.

அதை அடுத்து படத்துக்கு ’ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீ சுடத்தான் வந்தியா படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

From Around the web