ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஷாம்பெயின் நிறத்தில் கம்பளம்..!!

 
1

சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் 12-ம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெறுகிறது. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் எப்போதும் சிவப்பு கம்பள வரவேற்பு ரசிகர்களை கவரும் விதமாக அமையும்.

விருது பெறுவதை விட பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைபிரபலங்கள் சிவப்பு கம்பளத்தில் ஒய்யார நடை நடந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் காட்சிகள் தான் அதிகம் பகிரப்படும். 

இந்த நிலையில் நடப்பாண்டில் ஆஸ்கர் விழாவுக்கான சிவப்பு கம்பளம் மாற்றப்பட்டு ஷாம்பெயின் நிறத்தில் புதிய கம்பளம் அறிமுகமாகி இருக்கிறது. கடந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் தொகுப்பாளரை நடிகர் வில்ஸ்மித் கன்னத்தில் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அந்த வகையில் இந்த ஆண்டும் அது போல அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கவே கம்பளத்தின் நிறம் மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

From Around the web