இணையத்தை கலக்கும் கியூட் வீடியோ!

 
1

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் நயன்தாரா அவரது நீண்ட நாள் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த இத்திருமணத்தில் வரவேற்பு அழைப்பிதழ் வைத்திருந்த பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர். 

திருமணத்தை முடித்த கையோடு இருவரும் ஹனிமூன் சென்றுவிட்டு மீண்டும் தங்களது பணிகளில் மூழ்கினர். இதையடுத்து, கடந்த அக்டோபர் 9-ம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்துள்ளதாக புகைப்படம் ஒன்றினைப் பகிர்ந்து சமூகவலைத்தளம் வாயிலாக அறிவித்தனர். திருமணம் முடிந்த நான்காவது மாதத்திலேயே இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரான விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து வாடகை தாய் விவகாரம் பூதாகரம் எடுத்தது. 

Nayanthara

ஏராளமான சட்ட சிக்கல்கள், விசாரணை நடைபெற்று கடைசியாக அரசு தரப்பில் வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்த விவகாரம் சட்டப்படி தான் என்ற பிறந்த தகவல் வெளியானது.  எனவே, இவர்கள்  உயிர். உலகம் எனக் குழந்தைகளுக்குப் பெயரிட்டு தங்கள் பெர்சனல் பக்கங்களை அவ்வளவாக வெளிப்படுத்தாமல், மீடியா வெளிச்சமின்றி தன் குழந்தைகளை வளர்த்து வருகின்றனர் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர்.

குடும்ப வாழ்வில் நுழைந்தபோதும், தங்கள் சினிமா பயணத்தையும் தெளிவாகத் திட்டமிட்டு இருவரும் பயணித்து வரும் நிலையில், இவர்களது புகைப்படங்களும் வீடியோக்களும் அவ்வப்போது தொடர்ந்து ட்ரெண்டாகி வருகின்றன.இந்நிலையில், தங்களுடைய மகன்களாகிய இரட்டைக் குழந்தைகளின் முகத்தை இதுவரை எந்த ஒரு மீடியாவிலும் நயன்தாரா காட்டவில்லை. புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டத்தில் தனது மகன்களின் முகங்களை மட்டும் காட்டாமல் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வந்திருந்தார்.

இந்த சூழலில், மும்பை விமான நிலையில் நயன்தாரா தனது கணவர் மற்றும் மகன்களுடன் வந்துள்ளார். அதில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தனது இரு குழந்தைகளையும் கையில் தூங்கிக் கொண்டு செல்கிறார்கள். மேலும், கியூட்டாக  டங்கிரி உடை அணிந்திருந்த இரு குழந்தைகளை  நயன்தாரா விக்னேஷ் தூக்கி கொண்டு செல்லும் விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

From Around the web