பிரபல நடிகை தனது வீட்டிலேயே கோவில் கட்டிய தீவிர ரசிகர் – இன்று  திறப்பு விழா..!!
 

 
1

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம்வருபவர் நடிகை சமந்தா. பல சூப்பர் ஹிட் படங்களையும், பெண்மைய்ய கதாப்பாத்திர படங்களையும் கொடுத்துள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.  அந்த வகையில்,

நடிகை சமந்தாவுக்கு ஆந்திர மாநிலம் குண்டூரில் சந்தீப் என்ற ரசிகர் ஒருவர் கோவில் கட்டியுள்ளார். அதுவும் அதனை தனது வீட்டிலேயே கட்டியுள்ளார்.இன்று சந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த கோவில் திறக்கப்பட உள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளது. 

photo

இவர் இதற்கு முன்னர் சமந்தாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது திருப்பதி,  வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களுக்கு பாதயாத்திரை சென்றாராம். அதுமட்டுமல்லாமல் பிரதியுஷா என்ற அமைப்பை சமந்தாவுக்காக தொடங்கி அதன் மூலம் பல சமூக சேவைகளை செய்து வருகிறாராம். இதில் குறிப்பிடதக்க விஷயம் என்னவென்றால் அவர் ஒரு முறை கூட சமந்தாவை நேரில் சந்தித்தது இல்லையாம். இந்த நிலையில் அந்த கோவில், சந்தாவின் சிலை புகைப்படங்கள் அதிகமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

From Around the web