படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்…!

 
1

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘2.0‘ என்ற படத்தில் நடித்துள்ள அக்ஷய்குமார் இந்தியில் முன்னணி கதாநாயகனாக உள்ளார். இவர் தற்போது ‘படே மியான் சோட் மியான்‘ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரபல இந்தி நடிகர் டைகர் ஷெராப், மலையாள நடிகர் பிருதிவிராஜ், சோனாக்சி சின்ஹா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அக்ஷய்குமார், டைகர் ஷெராப் ஆகியோர் மோதும் ஆபத்தான சண்டை காட்சியொன்று படமாக்கப்பட்டது.

இதில் டுப் நடிகரை பயன்படுத்துமாறு அக்ஷய்குமாரிடம் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் நானே நடிப்பேன் என்று பிடிவாதமாக மறுத்து விட்டார். இந்நிலையில் சண்டை காட்சியில் அக்ஷய்குமாருக்கு பலத்த அடிபட்டு முழங்காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதனால் சண்டை காட்சியை படமாக்குவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

From Around the web