அப்பாவான மகிழ்ச்சியில் பிரபல சின்னத்திரை நடிகர்!

 
1

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘இதயத்தை திருடாதே‘ தொடரின் மூலம் மக்களிடையே பிரபலமானவார் சீரியல் நடிகர் நவீன். இவர் பிரபல சன்டிவி செய்தி வாசிப்பாளரான கண்மணியை காதலித்து வந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டனர்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இருவரும் தங்களுக்கு குழந்தை பிறக்கப் போகும் மகிழ்ச்சியான செய்தியை பதிவிட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து சமீபத்தில் கண்மணியின் வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.

இந்நிலையில், கண்மணி-நவீன் தம்பதியினருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நவீன் ‘குட்டி பட்டு வந்தாச்சு‘ என குழந்தையின் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து அவருடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web