மதுரையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு கோயில் கட்டியுள்ள ரசிகர்..! 

 
1

சூப்பர்ஸ்டார் தலைவர் ரஜினிகாந்துக்கு மதுரையில் உள்ள எக்கச்சக்கமான ரசிகர் ஒருவர் கோயில் கட்டியுள்ளார்..இந்த தகவல் வைரலாகி வருகிறது..

கிட்டத்தட்ட 250 கிலோ கருங்கல்லில் ரஜினிகாந்துக்கு சிலையும் வைத்து தினமும் வழிபாடு நடத்தி வருகிறாராம் அந்த ரசிகர்…அவரை பற்றி வீடியோ போட்டோ எல்லாம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது…

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக் எனும் ரசிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு கோயில் எழுப்பி வழிபாடு செய்து வரும் வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த தலைவர் ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது…

அவருக்கு வயது குறைவு என்றாலும் தலைவர் மீது இப்படி ஒரு ரசிகரா என அனைவருமே கொண்டாடி வருகின்றனர்…இதுதான் தலைவரின் மாஸ் என சொல்லி வருகின்றனர்..உலகளவில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தான் ஹீரோ வழிபாடு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பல நடிகர்களுக்கு இருக்கின்றது..அதனை போல இப்போது ஆங்காங்கே ரசிகர்கள் தீவிர பக்தர்களாக மாறி கோயில்களை கட்டி சிலைகளை வைத்து வருகின்றனர்..இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது..


 

From Around the web