மகளுக்காக எந்த லெவலுக்கும் இறங்கும் தந்தை... தந்தை - மகள் பாச போராட்டம் தான் சித்தா..! 

 
1

விஜய் சேதுபதி நடித்த ’பண்ணையாரும் பத்மினியும்’ ’சேதுபதி’ ’சிந்துபாத்’ ஆகிய படங்களை இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ’சித்தா’.

நடிகர் சித்தார்த் நடிக்கும் இந்த படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.இந்த படத்தின் ட்ரைலரில் நடிகர் சித்தார்த் தனது மகளுக்காக எந்த லெவலுக்கும் இறங்குவார் என்பதைக் குறிப்பிடும் வகையில் சில காட்சிகள் உள்ளன.

மகள் மீது அளவுக்கு அதிகமான பாசம் சித்தார்த் வைத்திருந்த நிலையில் அந்த மகளுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்ட நிலையில் அவர் எப்படி பொங்கி எழுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

சித்தார்த் நிமிஷா சஞ்சயன் உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார். பாலாஜி சுப்ரமணியன் ஒளிப்பதிவில் சுரேஷ் பிரசாத் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. 

From Around the web