சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்திய படம் – காஜல் அகர்வால்..!!

 
1

நடிகை காஜல் அகர்வால் தற்போது கமலுக்கு ஜோடியாக ‘இந்தியன் 2‘ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் காஜல் அகர்வால் இளமைக்காலம் மற்றும் முதுமைக்காலம் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.  இந்நிலையில் ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள ‘கோஸ்டி‘ என்ற படம் வருகிற 17-ம் தேதி திரைக்கு வர உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு கவுதம் கிச்சலும் என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வாலுக்கு தற்போது நீல் என்ற மகன் இருக்கிறார்.

இந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில், என் மகனை அவனது 8 வயது வரை திரைப்படங்கள் பார்ப்பதையோ அல்லது ஸ்மார்ட் போன் போன்ற சாதனங்களை பயன்படுத்துவதை அனுமதிக்கப் போவதில்லை. அவனது 8 வயதுக்கு பிறகு தான் திரைப்படங்கள் பார்ப்பதற்கு அனுமதிப்பேன். அப்போது என் மகனுக்கு நான் காண்பிக்கும் முதல் படம் விஜய் உடன் இணைந்து நடித்த துப்பாக்கி படமாகத்தான் இருக்கும். இந்த படம் என் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்திய படம். எனக்கு அதிகம் பிடித்தமான படம் என்று கூறியுள்ளார்.

From Around the web