கொரோனா நோய் தொற்று- மனம்திறந்த அஞ்சலி..!

 
கொரோனா நோய் தொற்று- மனம்திறந்த அஞ்சலி..!

கொரோனா தொற்று தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து நடிகை அஞ்சலி சமூகவலைதளங்கள் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார். 

தற்போதைய முன்னணி நடிகைகளை எல்லாம் ஓரம்கட்டி நடிப்பில் முத்திரை பதித்து, கமர்ஷியலாகவும் ஹிட் கொடுத்த நடிகை அஞ்சலியை இப்போது கோலிவுட் சினிமாவில் அவர் எங்கே இருக்கிறார் என்று தேட வேண்டியதாக உள்ளது.

பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்கு அஞ்சலி போராடி வருகிறார். எனினும் தமிழ் சினிமாவை விட தெலுங்கில் அவருக்கு நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வரிசையாக அமைந்து வருகின்றன.

அந்த வகையில் தமிழில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் ‘வக்கீல்சாப்’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது. இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் நிவேதா தாமஸ் நடிக்க, அபிராமி வெங்கடாச்சலம் கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார்.

தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் தெலுங்கு ஊடங்களில் நடைபெற்று வருகிறது. இதற்காக படக்குழுவினர் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று படத்தை விளம்பரம் செய்து வருகின்றனர். அப்போது நடிகை நிவேதா தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.


வக்கீல்சாப் பட ப்ரோமோஷனுக்காக நடிகை நிவேதாவுடன் அஞ்சலியும் ஊடக நேர்காணல்களில் பங்கேற்றார். இதானல் அவரும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் வக்கீல்சாப் படம் திட்டமிட்டப்படி வெளிவருமா என்கிற சிக்கல் உருவானது.

நிலைமையை புரிந்துகொண்ட அஞ்சலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை. கொரோனாவுக்கு தான் சிகிச்சை பெற்று வருவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்தியினை நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் வக்கீல்சாப் படக்குழு சற்று நிம்மதி அடைந்துள்ளது. 

தமிழில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாபாத்திரத்திற்கு தான் முக்கியத்துவம் வழங்கப்பட்டு இருக்கும். தெலுங்கில் அதே கதாபாத்திரத்தில் நிவேதா தாமஸ் நடித்திருந்தாலும், அபிராமி கதாபாத்திரத்தில் நடித்துள்ள அஞ்சலி தான் முதன்மையாக தெரிகிறார். இதனால் தெலுங்கு பதிப்புக்காக கதையில் சில மாறுதல் செய்யப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

From Around the web