மகனுக்காக நான் செய்த செயல்கள் பலருக்கு தெரியாது.. வெளிப்படையாக பேசிய எஸ்.ஏ.சி..!

இயக்குனர் சந்திரசேகர் தன்னுடைய ஒரே மகன் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து சந்தோஷமாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதுபோல 80ஸ் காலகட்டத்தில் சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி பல அரசியல்வாதிகள் எப்படி தப்பிக்கிறார்கள் என்று தன்னுடைய படங்களில் அரசியல்வாதிகளை விமர்சித்து பல படங்களை இயக்கி இருக்கிறார். இப்போது அவருடைய மகனும் அரசியலில் களம் இறங்கி இருக்கிறார்.
சந்திரசேகர் திரைப்படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் நடித்தும் வருகிறார். தற்போது அறிமுக இயக்குனர் நிதின் வேமுபதி இயக்கத்தில் கூறல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் விஜய் பற்றி சந்திரசேகர் பேசுகையில் நானும் விஜய்யும் இளம் பருவத்தில் இருந்து அதிகமாக பேசிக் கொள்ள மாட்டோம். குறைவாகத்தான் பேசி கொள்கிறோம்.
காலேஜிலிருந்து வந்து விட்டாயா? என்று சாதாரணமாக தான் எங்களுடைய பேச்சு இருக்கும். நாங்கள் இப்போ குறைவாக பேசுவதாக சிலர் நினைக்கிறார்கள் ஆனால் நாங்கள் அப்போவே அப்படித்தான். விஜய் அதிகமாக பேச மாட்டார் நானும் அதிகமா பேச மாட்டேன். இப்போ அவர் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து விட்டதால் எல்லோரும் அவரை உன்னிப்பாக கவனிக்கிறார்கள். விஜய் அவருடைய அப்பாவிடம் சரியாக பேசவில்லை என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. விஜய் ஆசைப்பட்டதால் தான் அவரை சினிமாவில் அறிமுகம் செய்தேன். ஆரம்பத்தில் அவருக்கு எல்லா வேலைகளையும் நான் செய்து கொண்டிருந்தேன். நான் இயக்குனரான பிறகு கருணாநிதி, ஜெயலலிதா என எல்லோரும் என்னுடைய நண்பர்கள்தான். எல்லோருமே என்னை அரசியலுக்கு வர சொல்லி அழைத்தார்கள்.
ஆனால் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை விட என்னுடைய மகன் அரசியலுக்கு வந்து மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவருக்காக ரசிகர் மன்றம் ஆரம்பித்து அதனை நற்பணி மன்றமாக மாற்றியது. பின்பு அதனை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றியது எல்லாமே நான்தான். ஆனால் அவரிடம் என்னுடைய அரசியல் ஆசையை நான் நேரடியாக கூறியது கிடையாது.
இப்போது அவர் ஆகவே அரசியலுக்கு வந்து சமூக உணர்வுகள் உள்ள மனிதராக மாறிவிட்டார். தன்னை உயர்த்திய தமிழ் நட்டிற்கு திருப்பி ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என அந்த பேட்டியில் சந்திரசேகர் பேசியிருக்கிறார்.அதுபோல விஜய் ஆரம்பத்தில் அவருடைய அப்பாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் பிரபலமான நடிகரானதும் அவர் நடிக்கும் படங்களில் கதைகளை கேட்பது, சம்பளம் பேசுவது கால் ஷீட்டு ஒதுக்குவது என எல்லா விஷயத்தையும் அவர்தான் முடிவு செய்தார். ஒரு பக்கம் விஜய் இயக்கத்தில் நிர்வாகிகளை நியமித்து அதை பலப்படுத்தி வந்தார்.
ஒரு கட்டத்தில் தான் விஜய் தனியாக செயல்பட தொடங்கினார். அதிலும் துப்பாக்கி படத்தில் இருந்து விஜய் கதை கேட்க தொடங்கியதாகவும் அந்த நேரத்தில் விஜய்க்கும் அவருடைய அப்பாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தான் விஜய் உடைய அப்பாவும் அம்மாவும் தனி வீட்டில் வசித்து வந்தார்கள் என்றும் செய்திகள் பரவி வந்தது.
அப்போது பேட்டிகளில் கூட பிள்ளைகள் பெற்றோரையும் கவனிக்க வேண்டும் அவர்களுடைய ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்று சந்திரசேகர் பேசியிருந்தார். ஆனால் இப்போது விஜய் தன்னுடைய அப்பா அம்மாவோட தான் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.