ஒரு பக்கம் காதலன்... இன்னொரு பக்கம் தந்தை.. கோலாகலமாக புத்தாண்டை கொண்டாடிய ஸ்ருதிஹாசன்..!

 
1

இந்திய சினிமாவின் உலக நாயகனாக திகழ்பவர் கமல்ஹாசன். இவரது அன்பு மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கு சினிமாவில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் .

சமீபத்தில் வெளியான சலார் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது மேலும் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் .

இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் இந்த வருட புத்தாண்டை வேற லெவலில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அவரது வீட்டில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் தனது தந்தை உலகநாயகன் கமல்ஹாசன் , தனது காதலர் சாந்தனு, தனது சகோதரி சுகாசினி, மற்றும் அவரது கணவர் இயக்குநர் மணிரத்னம் என தனது நெருங்கிய குடும்ப உறவுகளுடன் இந்த புத்தாண்டை வேற லெவலில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் 

இந்நிலையில் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம் வைரலாக வலம் வருகிறது.

From Around the web