வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மீண்டும் ஒரு போட்டோ வெளியானது..!
1973இல் கர்நாடகாவில் பிறந்த ஐஸ்வர்யா ராய் 1994 இல் உலக அழகி போட்டியில் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து இருவர் படத்தின் மூலமாக ஐஸ்வர்யா ராயை மணிரத்னம் சினிமாவில் அறிமுகம் செய்தார்.
இருவர் படத்திற்கு பின்னர் ஐஸ்வர்யா ராய்க்கு பட வாய்ப்புகள் இந்தி திரையுலகிலும் குவிந்தன. இதே போன்று இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனும் இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
அபிஷேக் – ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் 2007ம் ஆண்டுத் திருமணம் முடிந்தது. இருவருக்கும் ஆராத்யா என்ற மகள் உள்ளார், இந்நிலையில் அபிஷேக் – ஐஸ்வர்யா இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும் தகவல்கள் பரவின.
அம்பானி மகன் திருமணத்தில் கூடப் பச்சன் குடும்பத்தினருடன் ஐஸ்வர்யா வரமால் மகளுடன் தனியாக வந்தார் என்றும், அபிஷேக் பச்சனுக்கு வேறொரு நடிகையுடன் காதல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஐஸ்வர்யா ராய் தனது கணவரின் இளம் வயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இதன் மூலம் விவகாரத்து தகவலுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளாரென இணையவாசிகள் கூறி வந்தனர்.
ஆனால் இவர்களின் விவாகரத்து குறித்த செய்தி ஓய்ந்ததாகத் தெரியவில்லை, சமூக வலைத்தளத்தில் வரும் விவாகரத்து செய்திகளுக்கு அபிஷேக் பச்சன் ஆதரவாகப் பதிவிட்டு வருகிறார் என்றும், ஐஸ்வர்யா ராய் தனது பெயருக்குப் பின்னால் இருந்த பச்சனை நீக்கிவிட்டார் என்றும் இவர்கள் பிரிந்து வாழ்கின்றனர் என்று பலவாறு இவர்களின் விவாகரத்து குறித்த வதந்தி பரவி வருகிறது.
தற்போது அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மீண்டும் ஒரு போட்டோ வெளியாகியுள்ளது. மும்பையில் நடந்த பிரம்மாண்ட விருந்து ஒன்றில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் ஒன்றாகக் கலந்துகொண்டு எடுத்துக்கொண்ட போட்டோ வெளியாகியுள்ளது.
அந்த விருந்தில் ஐஸ்வர்யா ராயின் அம்மாவும் கலந்துகொண்டார். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது தாயார் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. இருவரும் கருப்பு நிற உடையில் மகிழ்ச்சி பொங்க சிரித்துக் கொண்டிருக்கும் அந்தப் புகைப்படம் தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.