நடிகர் விஜய் - த்ரிஷா விமானத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்..!!

 
1

‘வாரிசு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Leo

லியோ படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியானதிலிருந்து படத்தின் கதை என்னவாக இருக்கும் என ரசிகர்கள் தங்களது யூகங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்தப் படத்தின் மூலம் 5வது முறையாக விஜய் - த்ரிஷா ஜோடி 14 வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ளனர்.

லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில், ஒட்டுமொத்த படக்குழுவே செம ஜாலியாக இருப்பது அவர்கள் அடிக்கடி வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாகவே தெளிவாகி உள்ளன. தால் ஏரியில் படகு சவாரி, மகா சிவராத்திரி பூஜை என த்ரிஷாவும் தனக்கான ஸ்பேஸை அதிகமாகவே பயன்படுத்தி வருகிறார்.

Trisha vijay

நடிகை த்ரிஷா தொடர்ந்து காஷ்மீரில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிலையில், தற்போது விஜய் மற்றும் த்ரிஷா விமானத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

From Around the web