மீண்டும் ரீ-ரிலிஸ் ஆகும் பிளாக்பஸ்டர் திரைப்படம்..!!
Feb 26, 2023, 06:05 IST
கடந்த 2009-ம் ஆண்டு, ‘மகதீரா’ என்கிற படத்தில் நடத்திருந்தார் நடிகர் ராம்சரண்.இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய இந்தப் படம் ராம்சரணுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததோடு, அவரை புகழின் உச்சிக்கே அழைத்துச் சென்றிருந்தது.
அதுமட்டுமில்லாமல், பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான ‘மகதீரா’ இந்திய அளவில் ரசிகர் வட்டத்தையும் ராம்சரணுக்கு பெரிய அளவில் அதிகப்படுத்தியது. குறிப்பாக இந்தப் படத்தில் ஒற்றை ஆளாக எதிரிகள் 100 பேரை சவால்விட்டு வெட்டி சாய்க்கும் காட்சி, அனைத்து தரப்பினரிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்துதான், இவருக்கு கமர்சியல், மாஸ் படங்கள் நிறை வீடுதேடி வரத் துவங்கின.
‘மகதீரா’ வெளியாகி 14 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போதைய நிலையில் ராம்சரணின் புகழ் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வரும் மார்ச் 27-ம் தேதி ராம் சரணின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘மகதீரா’ ரசிகர்களின் கோரிக்கையின் பேரில் குறிப்பிட்ட சில தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.