எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம்..! இன்ஸ்டா பிரபலம் மணியின் வருங்கால மனைவி யார் தெரியுமா.?  

 
1

இன்ஸ்டாகிராம் நட்சத்திரமான மணி, சமீபத்தில் தனது நிச்சயதார்த்தத்தை வெகு எளிமையாக நடத்தியுள்ளார். இந்த நிகழ்வு சிம்பிளாக நடைபெற்ற போதிலும், அதில் இருந்த உணர்ச்சிகள் மற்றும் பின்னணி காரணமாக இது இணையத்தில் பரவத் தொடங்கியுள்ளது.

சமீபத்தில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருக்கமான நபர்களின் முன்னிலையில் மணியின் நிச்சயதார்த்தம் மிகவும் அமைதியாகவும், எளிமையாகவும் நடந்து முடிந்தது. இந்த நிகழ்வை மணியின் தம்பி தான் முழுமையாக ஏற்பாடு செய்து, தலைமை தாங்கி நடத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இது மணிக்கு முதல்முறை இடம்பெறும் திருமண ஏற்பாடல்ல என்பது தான் இந்த செய்தியை வைரலாக்க முக்கிய காரணம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, "கனி" என்ற பெண்ணுடன் அவர் திருமணம் செய்துகொண்டார். அந்த நேரத்தில் அவர் வெளியிட்ட குடும்ப புகைப்படங்கள், இன்ஸ்டாகிராம் புகழுக்கு மேலும் பலம் சேர்த்தன.

ஆனால், இந்த திருமண வாழ்க்கை கருத்து வேறுபாடு காரணமாக முடிந்து விட்டதாகவும், இருவரும் பிரிந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. தற்போது, அந்த பழைய வாழ்க்கையை முழுமையாக மறந்துவிட்டு, புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளார் மணி.

இந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கான சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியுள்ளது. 

From Around the web