ஒரே படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது..!!

 
1

டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் இயக்கத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியான படம் “எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்”. இந்தப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்று உலக அரங்கில் சாதனை படைத்துள்ளது. அதன்படி சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை படத்தில் நடித்த மிஷெல் யோ (Michelle Yeoh) வென்றுள்ளார்.

டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் இருவரும் சிறந்த இயக்குநர்களுக்கான விருதை பெற்றுள்ளனர். சிறந்த படத்தொகுப்புக்கான விருதை பால் ரோஜர்ஸ் பெற்றுள்ளார். சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை உள்ளிட்ட 7 விருதுகளைப் பெற்று இந்த படம் மிரட்டியுள்ளது.

சிறந்த திரைப்படம், இயக்குநர், ஒரிஜினல் திரைக்கதை - டேனியல் குவான், டேனியல் ஷைனட், சிறந்த நடிகை - மிச்செல் யோ, துணை நடிகர் - கே ஹூய் குவான், துணை நடிகை - ஜேமி லீ கர்டிஸ், எடிட்டிங் - பால் ரோஜர்ஸ் ஆகிய விருதுகளை வென்றது.

From Around the web