இப்படி ஒரு தலைப்பா ? கொதித்து எழுந்த பெண்கள்..!!
Updated: Dec 26, 2021, 21:03 IST
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘பெண் விலை வெறும் ரூபாய் 999’. வித்தியாசமான தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் வரதராஜ் இயக்கியுள்ளார்.
இந்த படம் பெண்களுக்கு எதிரான பாலியல், தொழில்நுட்ப வளர்ச்சியால் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் ஆகியவை குறித்து பேசவுள்ளது. இந்த படத்தில் எந்தவித ஆபாசமும் இல்லை என்று கூறப்படுகிறது.
இப்படத்தின் முதல் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது போஸ்டருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. காரணம் இந்த படத்தின் தலைப்பு தான்.இந்த படத்தின் தலைப்பு மற்றும் கதைக்களம் பெண்களுக்கு எதிரான இருப்பதாக பெண்கள் அமைப்புகள் குற்றச்சாட்டியுள்ளார்.
 - cini express.jpg)