வைரலாகிறது வெங்கட் பிரபுவை கலாய்க்கும் வீடியோ மீம்!

 
1

‘வாரிசு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘லியோ’. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ 68 படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவிருக்கிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார்.

Thalapathy 86

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 25வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் முன்னணி கலைஞர்கள் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் சர்வதேச தரத்தில் இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.

இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்தும் ஹீரோயின் குறித்தும் பல்வேறு தகவல்கள் பரவிவருகின்றன. பொதுவாக வெங்கட் பிரபுவின் படங்களில் ஜெய், சிவா, பிரேம்ஜி, வைபவ் ,அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் இடம்பெறுவர். நடிகர் சிவகார்த்திகேயன் கூட ஒரு விருது வழங்கும் விழாவில் வெங்கட் பிரபு கதையில்லாமல் கூட படம் பண்ணுவார், பிரேம்ஜி இல்லாமல் பண்ணமாட்டார் என கலாய்ப்பார்.

இந்த நிலையில், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 68 படம் தொடர்பாக வீடியோ மீம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.பகவதி படத்தில் விஜய்யின் டீக்கடையில் வேலை செய்யும் வடிவேலு, தன் ஊர்க்காரரான சிங்கமுத்துவை பார்த்ததும் டீ குடிக்க அழைப்பார். அப்போது சிங்கமுத்து தனது ஒட்டுமொத்த ஊர்க்காரர்களையும் கூப்பிட, விஜய், சிங்கிள் டீ கேட்ட, அலோ பண்ணேன். இப்போ ஊரே உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருக்கு என காண்டாவார்.

இதனை வடிவேலு ஏஜிஎஸ் எனவும், வெங்கட் பிரபுவவை சிங்கமுத்து எனவும் மாற்றி வீடியோ மீம் உருவாக்கியுள்ளனர். வெங்கட் பிரபு அழைக்க, பிரேம்ஜி, வைபவ், மஹத், சிவா, ஜெய் என அவரது பட நடிகர்கள் ஒட்டுமொத்தமாக உள்ளே நுழைகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From Around the web