கடந்த வாரம் எலிமினேட் ஆன கூல் சுரேஷுக்கு நடிகர் சந்தானம் மாலை போட்டு கவுரப்படுத்திய வீடியோ வைரல்..!

 
1

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முடிய இன்று 25 நாட்களே உள்ளதால் ஆட்டம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் மட்டும் 2 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அனன்யா மீண்டும் ஒரு அறிய வாய்ப்பில் வீட்டுக்குள் வர இருப்பினும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்ததால் மக்களால் மீண்டும் வெளியேற்றப்பட்டார் . இதையடுத்து மற்றொரு போட்டியாளரான கூல் சுரேஷ் கடந்த சனி கிழமையன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் இன்று கூல் சுரேஷ் நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்துள்ளார் . அவருக்கு சந்தானம் மாலை போட்டு பார்ட்டி இருக்கிறார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

From Around the web