தவெக கட்சியில் முக்கிய பதவியில் ஆதவ் அர்ஜுனா ..!
Jan 30, 2025, 06:35 IST

ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்து கடந்த ஆண்டு டிசம்பரில் கட்சியிலிருந்து விலகினார். விலகிய பின்னர் விஜயுடன் மிகவும் நெருக்கமான நட்பினை வளர்த்து கொண்ட இவர் தற்போது விஜய் கட்சியில் இணையவுள்ளதாக தெரியவந்துள்ளது.
மற்றும் இவருக்கு கட்சியில் முக்கிய பதவியினை வழங்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஒரு மணிநேரம் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கட்சியின் உட்கட்டமைப்பினை அமைக்கும் பணியினை இவருக்கு அளித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் வைரலாகியுள்ளது.
மற்றும் சுமூகமான முறையில் பேச்சு வார்த்தைகள் முடிவடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து இன்னும் அதிகாரபூர்வ வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.