புனேவில் துவங்கிய ஷூட்டிங்- ஷாரூக்கான், நயன்தாரா காட்சிகளை படமாக்கிய அட்லீ..!

 
ஷாரூக்கான் மற்றும் நயன்தாரா
அட்லீ இயக்கும் இந்தி படத்துக்கான ஷுட்டிங் புனேவில் துவங்கியுள்ளதை அடுத்து, ஷாரூக்கான் மற்றும் நயன்தாரா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

பிகில் படத்தை தொடர்ந்து அட்லீ பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார். இதற்கான முதல் நாள் படப்பிடிப்பு புனேவில் துவங்கியுள்ளது. ஷாரூக்கான் கதாநாயகனாகவும் நயன்தாரா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடிக்கிறார். படத்தின் இரண்டாவது கதாநாயகியாக சானியா மல்ஹோத்ரா நடிக்கவுள்ளார். படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புனேவில் துவங்கப்பட்டுள்ள படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. படப்பிடிப்பு தளத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 

From Around the web