ஆடு ஜீவிதம் படம் ஓடிடியில் ரிலீஸ்! எப்போ தெரியுமா ?

 
1
சவுதி  அரேபியாவுக்கு கேரளாவில் இருந்து தனது மனைவி, அம்மாவை விட்டு வேலைக்குச் செல்லும் ப்ரீத்திவிராஜ் அங்கு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் வேலைக்கு கொத்தடிமையாக மாற்றப்பட்டு சித்திரவதை அனுபவிக்கின்றார். அதில் இருந்து அவர் எப்படி தப்பித்தார் என்ற உண்மையான கதையை மையமாக வைத்து  ஆடு ஜீவிதம் படம் வெளியானது.

மலையாள நாவலான ஆடு ஜீவிதம் நாவலை தழுவியே இயக்குனர் பிளேஸ்லி சுமார் 16 ஆண்டுகள் கடுமையான போராட்டத்தின் பின் கடந்த மார்ச் மாதம் இந்த திரைப்படத்தை ரிலீஸ் ஆகியிருந்தார்.

இந்தத் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றதோடு உலக அளவில் சுமார் 150 கோடியை வாரி குவித்து இருந்தது.

இந்த நிலையில், தற்போது பிரித்திவிராஜ் நடித்த ஆடு ஜீவிதம் திரைப்படம் எதிர்வரும் ஜூலை 19ஆம் தேதி நெட்பிளிக் ஓடிடி  தளத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

From Around the web