காதலர் தினத்தில் செம அறிவிப்பை வெளியிட்ட அமிர்-பாவனி..!

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு நிகழ்வு ரசிகர்களால் மறக்க முடியாத மாதிரி நடந்து விடுகிறது. அந்த மாதிரி தான் கடந்த 5வது சீசனில் ஒரு காதல் ஜோடி உருவாகி இருக்கின்றனர். இந்த 5வது சீசன் ஆரம்பத்தில் ஒரு போட்டியாளராக உள்ளே நுழைந்த பாவனி ரெட்டிற்கு ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவு கொடுத்து வந்தனர். இந்த சீசனில் முதல் ஆளாக ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ் தொடங்கப்பட்டது பாவனிக்கு தான். சின்னத்திரை நடிகையாக பலருக்கும் பரீட்சைகளும் ஆகிய இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் பாவனின் அதிக அளவில் ரசிகர்களை கொண்டுள்ளார்.

இருப்பினும் ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் அபிநய் மற்றும் பாவனி இருவரும் காதலிப்பதாக பெரும் சர்ச்சை ஒன்று கிளம்பியது. அதன் பின் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்த அமீர், பாவனியை காதலிப்பதாக கூறி அவர் பின்னால் அந்நிகழ்ச்சி முழுவதும் சுற்றினார். இந்த சீசனில் பாவனி மூன்றாவது இடத்தையும், நான்காம் இடத்தை அமீர் பிடித்து இருந்தார்கள்.

Amir pavani

இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பாவனி மற்றும் அமீருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்த காரணத்தால் இவர்கள் இருவரும் பின்பு பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் டைட்டிலையும் வென்றனர்.

அத்தோடு பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர் பல முறை தனது காதலை சொன்ன போதும் ஏற்றுக்கொள்ளாத பாவனி ஒரு கட்டத்தில், ஐ லவ் யூ சொல்லி அமீரின் காதலை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். தற்போது சின்னத்திரையில் அனைவருக்கும் பிடித்த ஒரு ஜோடியாக இவர்கள் இருவரும் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். 

இந்த நிலையில் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு காதலர் தினத்தை ஒட்டி பேட்டி அளித்த போது, ‘நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வது உறுதி, ஆனால் அதே நேரத்தில் இன்னும் ஒரு வருடம் கழித்து தான் திருமணம் செய்வோம், திருமணத்திற்கு முன்பு நாங்கள் எங்கள் துறையில் சாதிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.

திருமணம் குறித்து பாவனி கூறியபோது, ‘எனக்கு விரைவில் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டு குடும்பத் தலைவியாக குழந்தைகளுடன் வாழ வேண்டும் என்று ஆசை என்றும் அந்த நாள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்து விட்டால் பொறுப்புகள் அதிகமாகும் என்றும் அதற்குள் நாங்கள் எங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்றும் எங்களுடைய தொழிலில் நன்றாக காலூன்ற வேண்டும் என்றும் அதன் பிறகு தான் திருமணம் என்றும் அமீர்-பாவனி ஆகிய இருவருமே அந்த பேட்டியில் தெரிவித்து உள்ளனர். இதனை அடுத்து அமீர்-பாவனி திருமணம் விரைவில் என்பது உறுதி செய்யப்பட்டாலும் இந்த வருடம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

From Around the web