கொரோனா மட்டுமல்ல  கரீனாவையும் சமாளித்தோம் - அமீர்கான்!

 
கொரோனா மட்டுமல்ல கரீனாவையும் சமாளித்தோம் - அமீர்கான்!

பாலிவுட்டில் தனக்கென தனி இடத்தை பிடித்து முண்ணனியில் இருப்பவர் நடிகர் அமீர்கான். இவர் நடிகை கரீனா கபூருடன் இணைந்து நடித்து வரும்  லால் சிங் சத்தா என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.  இந்த படம் டாம் ஹாங்க்ஸ் கதாநாயகனாக நடித்த ஹாலிவுட் ஹிட் படமான ‘பாரஸ்ட் கம்பி’ன் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து நடிகர் அமீர்கான்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி பாரஸ்ட் கம்ப் படம் ஒரு இறகில் ஆரம்பித்து அந்த இறகு வானத்திலிருந்து கீழே மிதந்து வந்து  அது மக்களின் தோள்களுக்கு மேலே சென்று ஒரு காரின் மீது விழுகிறது. காற்று அந்த இறகை அங்கும் இங்கும் தள்ளுகிறது. இதுதான் படத்தின் சாரம்.

இந்த கதையை  படமாக  எடுத்தபோது, வாழ்க்கையும் ஒரு இறகு போல மாறிவிட்டது. வெவ்வேறு காற்றுகள் நம்மை வெவ்வேறு திசைகளில் தள்ளும் போது அதனுடன் பயணிக்கிறோம். முடிவில் ஒரு இடத்தில் இறங்குகிறோம்" என தெரிவித்துள்ளார். மேலும் உலகமே கொரோனாவை சமாளித்த போது நாங்கள் கொரோனாவுடன் சேர்த்து நடிகை கரீனாவையும் சமாளித்துக் கொண்டிருந்தோம்.அவர் கர்ப்பிணியாக இருந்ததால் அவர் மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. இந்தப்  படம் கிறிஸ்துமசுக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From Around the web