மகளாக நடித்த பிரபல நடிகையை விரைவில் திருமணம் செய்யும் ஆமிர்கான்..?

 
ஃபாத்திகா சனா ஷேக்குடன் நடிகர் ஆமிர்கான்

மனைவி கிரண் ராவ்விடம் இருந்து விவகாரத்து பெற்றுள்ள நடிகர் ஆமிர்கான், பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகை ஒருவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2005-ம் ஆண்டு நடிகர் ஆமிர்கான் தன்னுடைய படத்தில் துணை இயக்குநராக பணியாற்றிய கிரண் ராவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டர். இவர்கள் இருக்கும் ஒரு மகன் இருக்கின்றான். 

இருவரும் 15 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த வந்த நிலையில், சமீபத்தில் விவகாரத்து பெற்றனர். இது பாலிவுட் உலகில் மிகப்பெரிய பேசுபொருளானது. தாங்கள் இருவரும் நல்ல பெற்றோர்களாக இருப்போம் என்று கூறி அறிக்கை வெளியிட்டு விவகாரத்தை உறுதி செய்தனர்.

இந்நிலையில் ஆமிர்கான் தங்கல் படத்தில் தனக்கு மகளாக நடித்த ஃபாத்திமா சனா ஷேக்கை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், அதனால் தான் கிரண் ராவிடம் இருந்து ஆமிர்கான் விவகாரத்து பெற்றதாக கூறப்படுகிறது.

நடிகர் ஆமிர்கானுக்கு வயது 56 ஆகும். அதேபோல அவருடைய காதலி என்று கூறப்படும் நடிகை ஃபாத்திமா சனா ஷேக்கு வயது 29 தான் ஆகிறது. இவர்களுடைய திருமணம் குறித்து வெளியாகியுள்ள தகவல் பாலிவுட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

From Around the web