அய்யப்பனும் கோஷியும் இந்தி ரீமேக்கில் இருந்து விலகிய அபிஷேக் பச்சன்..!

 
அபிஷேக் பச்சன்

அய்யப்பனும் கோஷியும் இந்தி ரீமேக்கில் நடிகர் அபிஷேக் பச்சன் விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மலையாளத்தில் வெளியாகி தேசியளவிலான திரை ஆர்வலர்களிடம் பாராட்டுக்களை பெற்ற படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. இப்படம் அனைத்து தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி தெலுங்கு ரீமேக்கின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதற்கிடையில் அய்யப்பனும் கோஷியுன் படத்தின் இந்தி ரீமேக் துவங்கியுள்ளது.

முன்னதாக இந்த படத்தில் ஜான் அப்ரஹாம் மற்றும் அபிஷேக் பசன் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஜெகன் சக்தி என்பவர் இயக்கும் இந்த படத்திற்கான துவக்கப் பணிகள் நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட இருந்தன.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற சிறிய விபத்தில் அபிஷேக் பச்சனுக்கு கை மூட்டு முறிவு ஏற்பட்டது. இதனால் இந்த படத்தில் நடிக்காமல் அவர் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

தற்போது அபிஷேக் நடிக்கவிருந்த கேரக்டரில் அர்ஜுன் கபூரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி ஜான் ஆப்ரகாம் பிஜு மேனன் கதாபாத்திரத்திலும் அர்ஜுன் கபூர் பிரித்விராஜ் கதாபாத்திரத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

From Around the web