அடுத்தாண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழாவும் தள்ளிவைக்கப்படுகிறது- அகெடமி..!!

 
ஆஸ்கர் விருதுகள்

ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுகளை வழங்கி வரும் மோஷன் பிக்சர்ஸ் ஆஃப் ஆர்ட்ஸ் & சையின்ஸ் அமைப்பு அடுத்தாண்டு நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

சினிமாத்துறைக்கு வழங்கப்படுவதும் விருதுகளில் முக்கிய அங்கீகாரமாக திகழ்வது ஆஸ்கர். இதை ஹாலிவுட்டைச் சேர்ந்த அகெடமி அமைப்பு என்று குறிப்பிடப்படும் மோஷன் பிக்சர்ஸ் ஆஃப் ஆர்ட்ஸ் & சையின்ஸ் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அமைந்துள்ள கோடேக் ஸ்டூடியோவில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால் நடப்பாண்டு கொரோனா பரவல் காரணமாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஏப்ரல் மாதம் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் ஏப்ரல் 26-ம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா ரிமோட் முறையில் நடத்தப்பட்டது.

இந்நிலையில் அடுத்தாண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்படுவதாக அகெடமி அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்கர் விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆஸ்கர் விருதுக்காக தேர்வு செய்யப்படும் படங்களுக்கான பரிசீலனை டிசம்பர் 21-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அகெடமி தெரிவித்துள்ளது. தவிர, ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் ஆஸ்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 

From Around the web