உடற்பயிற்சியின் போது விபத்து- ஜூனியர் என்.டி.ஆருக்கு சிகிச்சை..!

 
மகன்களுடன் ஜூனியர் என்.டி.ஆர்

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு உடற்பயிற்சியின் போது எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ள விபரம் தெரியவந்துள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து கொரட்டலா சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். அதற்காக அவர் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த போது, சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் கைவிரல் படுகாயம் அடைந்தது. அதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள விபரம் வெளியாகியுள்ளது.

இதனால் கொரட்டலா சிவா படத்தின் ஷூட்டிங் பணிகள் தடைபட்டுள்ளன. இப்போது ஜூனியர் என்.டி.ஆர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். தீபாவளி நாளில் தன்னுடைய மகன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
 

From Around the web