பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு செட் அமைக்கும் பணியில் கோர விபத்து? ஒருவர் படுகாயம்!

 
1

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாக உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த சீசனை போலவே இந்த சீசனிலும் இரண்டு வீடுகளாக என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. ஆனாலும் இது தொடர்பில் முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 சீசன்களையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனாலும் எட்டாவது சீசனை தன்னால் தொகுக்க முடியாது என இதில் இருந்து அதிரடியாக விலகி இருந்தார். இதை தொடர்ந்து அவருடைய இடத்திற்கு விஜய் சேதுபதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து வரலாற்றில் முதல் முறையாக மக்களால் வழங்கப்பட்ட பிக் பாஸ் ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதில் விஜய் சேதுபதிக்கு பொதுமக்கள் அட்வைஸ் கொடுப்பது போல காணப்படுகின்றது. ஆனாலும் இந்த முறை விஜய் சேதுபதியின் ஸ்டைல் எப்படி இருக்க போகுது என்பதை காண்பதற்கு பலரும் ஆர்வமாக உள்ளார்கள்.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செட் அமைக்கும் பணியில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது என தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது சென்னை அடுத்துள்ள இவிபி ஃபிலிம் சிட்டியில் பிக் பாஸ் செட் அமைக்கும் பணியின் போது உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் கை, இடுப்பு, எலும்பு உடைந்து படுகாயம் அடைந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

From Around the web