குவியும் ஆதரவும்.. எதிர்ப்பும். தீயாக பரவும் பதிவு..!

 
1

இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.

இதில், ‘சாமி இல்லனு சொல்லிட்டு சுத்தன ராமசாமி தான நீ’ என்று இடம்பெற்றுள்ள வசனங்கள் சமூகவலைத்தளங்களில் பேசுபொருள் ஆனது.இதையடுத்து நடிகர் சந்தானம் தனது வீட்டில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தின்போது ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சாமி இல்லனு சொல்லிட்டு சுத்தன ராமசாமி தான நீ’ என்ற ஆடியோவுக்கு ‘நா அந்த ராமாமி இல்ல’ என பதில் கூறும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ வெளியான சில நேரத்திலேயே வைரலானது. இதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். வீடியோ சர்ச்சையான நிலையில், இதனை நடிகர் சந்தானம் தனது சமூக வலைதளத்தில் இருந்து நீக்கினார்.



 

From Around the web